tamilnadu

img

உ.பி. பாஜக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்!

லக்னோ:
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை சிறையில் தள்ளியதற்கு உத்தரப்பிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில்,குடியுரிமை திருத்த சட்டத்துக்குஎதிரான போராட்டங்களின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியானார்கள். 1,200 பேர் கைது செய்யப்பட்டனர். 5 ஆயிரத்து 558 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.இந்நிலையில், பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி, தனது
‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்தியில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “குடியுரிமை திருத்தசட்டத்துக்கு எதிராக போராடியவர்களை எந்த விசாரணையும் இல்லாமல் ஆதித்யநாத் அரசுசிறையில் தள்ளுகிறது. பிஜ்னோர், சம்பல், மீரட், முசாபர்நகர்,பிரோசாபாத் உள்ளிட்ட மாவட் டங்களில் போராட்டம் நடத்திய அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மிகவும்வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. இதற்காக பொதுமக்களிடம் உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்பாவிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். போராட்டங்களில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

;